சென்னையில் ஒரே நேரத்தில் மழை, வெயில்: வானிலை எச்சரிக்கை

சென்னையில் ஒரே நேரத்தில் மழை, வெயில்: வானிலை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நேரத்தில் சில பகுதிகளில் மழையும், வேறு சில பகுதிகளில் வெயிலும் நிலவக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். வேளச்சேரி, தாம்பரம், வண்டலூர் போன்ற புறநகர் பகுதிகளில் மழையும், தி.நகர், வடபழனி, கோயம்பேடு போன்ற நகர்ப்பகுதிகளில் வெயிலும் காணப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடுத்த சில நாட்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Source: OneIndia Tamil

More in Science & Environment

Read the live feed on ZapIndies