தமிழ்நாடு அரசு மதுபானங்கள் மீது புதிய 'சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் தீர்வை' விதிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக 2006 ஆம் ஆண்டு மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. இந்த வரி வருவாய் கழிவு மேலாண்மை, போதை மீட்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற நற்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்கள் மீது புதிய வரி விதிக்க தமிழ்நாடு அரசு திட்டம்
Source: Zee Tamil News