சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கையின்படி, இன்று இரவு 7 மணி வரை திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் மலைப் பகுதிகள், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தாழ்வான பகுதிகளில் நீர் தேங்குவதற்கும், சாலைகளில் வழவழப்புக்கும் வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை
Source: ABP Nadu