திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தவெக அமைச்சர்கள் எதிர்க்கட்சி கேள்விகளுக்கு பதிலளிக்காமல் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டினார். மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் 20 ஹார்ட் டிஸ்க் குறித்த விளக்கம் அளிக்கவில்லை என்றும், வெள்ளை அறிக்கையில் திமுக சாதனைகளை பட்டியலிட்டும் பணிகள் நடக்கவில்லை என கூறுவது முரண் என்றும் சுட்டிக்காட்டினார். மூன்று ஃபைல்களை வெளியிட தவெக தயங்குவதாகவும், 100 நாள் ஆட்சி மக்களுக்கு பயனற்றது என்றும் தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி காட்டம்: தவெக அமைச்சர்கள் பதில் அளிக்க திறனில்லை
Source: Kalaignar Seithigal