பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து பிடிஐ எம்.எல்.ஏக்கள் கழுதை வண்டிகளில் சட்டமன்றத்திற்கு வந்து போராட்டம் நடத்தினர். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.390.79 ஆக உயர்ந்துள்ளது. விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அரசு மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்திய போதிலும், முதல் நாளிலேயே பல எரிபொருள் நிலையங்கள் ஒத்துழைக்க மறுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: சிந்து சட்டமன்றத்திற்கு கழுதை வண்டியில் வந்த பிடிஐ எம்.எல்.ஏக்கள்
Source: news18.com