சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். பெரியார், அண்ணா பிறந்தநாள் மற்றும் திமுக உதய நாளை இணைத்து ஆண்டுதோறும் செப்டம்பரை திராவிட மாதமாகக் கொண்டாடுவதாக அவர் தெரிவித்தார். காய்ச்சல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட விழா இன்று நடைபெற்றது. 75 ஆண்டுகளாக இயக்கம் நிலைத்திருப்பது தொண்டர்களின் பங்களிப்பால் என்று பாராட்டினார்.
திமுக முப்பெரும் விழாவில் ஸ்டாலின் விருதுகள் வழங்கி உரை
Source: Kalaignar Seithigal