தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் 8 படுகொலைகள் நடந்ததாகவும், தவெக ஆட்சியில் 200-க்கும் மேற்பட்ட கொலைகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட குற்றங்கள் நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார். முதல்வர் விஜய் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த சட்டங்களை இயற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
Source: News7 Tamil