சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமை செயலகம் கட்டுவதை தடை செய்யக் கோரி, கோடம்பாக்கம் வழக்கறிஞர் ஆர்.எஸ். தமிழ்வேந்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில் கட்டுமானத்துக்கு அரசாணை வெளியான நிலையில், மீனவர்களும் எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பட்டினப்பாக்கம் தலைமை செயலக கட்டுமானத்துக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு
Source: OneIndia Tamil