ஆனைக்குட்டம் அணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி ஆய்வு செய்தார்

ஆனைக்குட்டம் அணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி ஆய்வு செய்தார்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் ஆனைக்குட்டம் கிராமத்தில் அர்ஜீனா நதிக்கு குறுக்கே 1987-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆனைக்குட்டம் அணையை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷரண்யா அறி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அணையின் மதகுகள், நீர்த்தேக்கப் பகுதிகள் மற்றும் பிரதான கால்வாய்ப் பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். இந்த அணையின் மூலம் சிவகாசி, விருதுநகர் வட்டங்களில் 1,174.07 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆய்வில் நீர்வள ஆதாரத்துறை பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Source: ABP Nadu

More in Top Stories

Read the live feed on ZapIndies