இளையராஜா இசையமைத்த முதல் இலங்கைத் தமிழ்த் திரைப்படமான 'அந்தோனி', 2027ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவு தேர்வுக்குழுவுக்கு இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் ஊடாக அனுப்பப்பட்டுள்ளது. சுகிர்தன் கிறிஸ்துராஜா, ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கிய இப்படம் கடந்த மார்ச் மாதம் 12க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியானது. இலங்கையில் இருந்து ஒரு தமிழ்ப் படம் ஆஸ்கர் தேர்வுக்கு அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கர் தேர்வுக்கு அனுப்பப்பட்ட முதல் இலங்கைத் தமிழ்ப் படம் 'அந்தோனி'
Source: Cinema Vikatan