2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்று மொத்த எண்ணிக்கையை 6 ஆக உயர்த்தியது. ஷூட்டிங்கில் 10 மீ ஏர் ரைபிள் குழுப் பிரிவில் வெள்ளியும், தனிநபர் பிரிவில் ஹிமான்சு தில்லான் வெள்ளி, ருத்ரங்ஷ் பட்டீல் வெண்கலமும் பெற்றனர். முதன்முறையாக அறிமுகமான எம்.எம்.ஏ-வில் சூச்சிகா தரியல் வெண்கலம் வென்று வரலாறு படைத்தார். ஹாக்கி, கபடி, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டனில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆசிய விளையாட்டு: இந்தியாவுக்கு 6 பதக்கங்கள்; எம்.எம்.ஏ-வில் வரலாறு
Source: Vikatan