இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ராஷ்ட்ரிய லோக் தளம் தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெயந்த் சௌத்ரியை டெல்லியில் சந்தித்துள்ளார். இதனால் அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஷமியோ அவரது சகோதரர் ஹசீப்போ ஆர்எல்டி சார்பில் அம்ரோகா தொகுதியில் போட்டியிடலாம் எனப் பேச்சுகள் எழுந்துள்ளன. ஆனால் இதுகுறித்து ஷமி அல்லது ஆர்எல்டி தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஷமி-ஜெயந்த் சௌத்ரி சந்திப்பு: உ.பி. தேர்தல் பேச்சு
Source: Kalki Online