பிரதமர் மோடி பதவியில் இருக்கும் வரை விவசாயிகள் நலன்களில் எந்த சக்தியாலும் பாதிப்பு ஏற்படுத்த முடியாது என்று மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் உறுதிபட தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அவை பொய்யானவை என்று கூறினார். பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நடைபெற்ற பாஜகவின் நான்காவது யாத்திரை தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், பஞ்சாப் அரசு பிரதமர் பைசல் பீமா யோஜனா திட்டத்தை செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.
விவசாயிகள் நலன்களை யாரும் பாதிக்க முடியாது: சிவராஜ் சிங் உறுதி
Source: Nakkheeran