இலங்கையின் ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில் 277 பேர் கொல்லப்பட்டனர், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். குற்றவாளிகளில் தற்கொலைத் தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் நௌஃபர் மௌலவியும் அடங்குவார். மற்ற 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு
Source: BBC Tamil