எல் நினோ காரணமாக தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழையில் அதிக மழையும் வெள்ளமும் ஏற்படலாம்; அதன்பிறகு வறட்சி, கடும் வெப்பம் உள்ளிட்ட பாதிப்புகள் வரலாம் என தமிழ்நாடு அரசின் நிபுணர் குழு தெரிவித்துள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை இயல்பைவிட 50 முதல் 200 மில்லி மீட்டர் கூடுதல் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மழை சமமாக பெய்யாததால் சில பகுதிகளில் நீர் பற்றாக்குறை ஏற்படலாம் என்பதால், நீர் சேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குழு பரிந்துரைத்துள்ளது.
எல் நினோ: தமிழ்நாட்டில் அதிக மழை, பின்னர் வறட்சி எச்சரிக்கை
Source: BBC Tamil