வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வரும் 'இவரைத் தெரியுமா?' போன்ற புகைப்படங்களைத் திறந்தால், மால்வேர் பதிவிறங்கி வங்கிக் கணக்கு காலியாகும் அபாயம் உள்ளதாக சைபர் பாதுகாப்புத் துறை எச்சரித்துள்ளது. இந்த மோசடியில் தீம்பொருள் தொலைபேசியைக் கட்டுப்படுத்தி, OTP மற்றும் வங்கிச் செயலிகளைக் கண்காணித்து பணத்தைத் திருடுகிறது. தெரியாத செய்திகள், இணைப்புகள், படங்களைத் திறக்கவோ பதிவிறக்கவோ வேண்டாம்; மீடியா தானாகப் பதிவிறக்கம் ஆவதை நிறுத்தி, இரண்டு-படி சரிபார்ப்பை இயக்கவும்.
வாட்ஸ்அப் 'இவரைத் தெரியுமா?' புகைப்படம் கிளிக் செய்தால் மால்வேர் தாக்குதல்
Source: Kalki Online