சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள இ-சேவா கேந்திரா மையங்களில் பணிபுரிய 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள்; மாத சம்பளம் ரூ.15,000. கணினி அறிவியல் தொடர்பான பட்டப்படிப்பு முடித்த 18 முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.09.2026; எழுத்துத் தேர்வு அக்டோபர் 10, 11 ஆம் தேதிகளில் நடைபெறும்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 115 டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்கள்
Source: Kalki Online