டெல்லியின் ஆஸ்தா குஞ்ச் பூங்காவில் 17 வயது சிறுமி மூன்று பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் அளித்துள்ளார். போலீஸ் வேடத்தில் வந்த அவர்கள் துப்பாக்கி மற்றும் கத்திகளைக் காட்டி மிரட்டியதாகவும், கத்தியை கழுத்தில் வைத்து பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் நண்பர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.
டெல்லி பூங்காவில் போலீஸ் வேடத்தில் மூவர் பலாத்காரம்: சிறுமி புகார்
Source: news18.com