மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய், திமுகவை தீயசக்தி என விமர்சித்தார். இதற்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுகவில் இருந்து விலைக்கு வாங்கிய மரகதம் குமரவேலை வேட்பாளராக வைத்துக்கொண்டு திமுகவை தீயசக்தி எனக் கூறுவது கூச்சமற்ற செயல் எனக் கேள்வி எழுப்பினார். ஜெம் வீரமணி வழக்கு, பாஜக குறித்த நிலைப்பாடு உள்ளிட்ட விவகாரங்களிலும் விஜய்க்கு ஸ்டாலின் சரமாரி கேள்விகள் எழுப்பியுள்ளார்.
மதுராந்தகம் பிரச்சாரம்: விஜய்க்கு ஸ்டாலின் கடும் பதிலடி
Source: malaimurasu.com