இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. தலைமை ஆணையர் எடுத்த முடிவுகளுக்கு மற்ற இரு ஆணையர்கள் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவித்ததாக 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புலனாய்வு வெளிப்படுத்தியுள்ளது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் வரைவுப் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும்: சி.பி.ஐ. கோரிக்கை
Source: IBC Tamil