லக்னோவின் மோகன்லால்கஞ்ச் பகுதியில் வீட்டருகே மது அருந்திய இருவரை 70 வயது மூதாட்டி எதிர்த்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இரும்புக் கட்டில் காலில் விழுந்து பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக ராஜேஷ் குட்டு, ஹரிராம் ராவத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்னோவில் மது குடித்ததை எதிர்த்த மூதாட்டி பலாத்காரம் செய்து கொலை
Source: malaimurasu.com