வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர மறுசீரமைப்பு (SIR) திட்டத்தில் அறிவிப்பு பெற்ற வாக்காளர்கள் அதிகாரிகள் முன் நேரில் ஆஜராகத் தேவையில்லை என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான கூட்டம் முடிவு செய்துள்ளது. வாக்குச்சாவடி அதிகாரிகளே வீடுகளுக்குச் சென்று ஆவணங்களைச் சேகரிப்பர்; விதிவிலக்கான சந்தர்ப்பங்களில் மட்டுமே விசாரணை, பெரும்பாலும் இணையவழியில் நடைபெறும். ஆணையர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு எனும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அனைத்து முடிவுகளும் ஆணையர்களின் முழு ஒப்புதலுடனே எடுக்கப்பட்டதாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
SIR சர்ச்சை: வாக்காளர்கள் நேரில் வரத் தேவையில்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Source: News18 Tamil