காங்கோவில் ராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். கிக்விட்டிலிருந்து கின்ஷாசா சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கெங்கேயில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது, ஓடுபாதை இல்லாததால் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. உயிரிழந்தவர்களில் இரண்டு தளபதிகள் உள்ளிட்ட மூத்த ராணுவ அதிகாரிகள், அரசாங்கக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் அடங்குவர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
காங்கோவில் ராணுவ விமானம் விபத்து: 14 பேர் உயிரிழப்பு
Source: malaimurasu.com