முதல்வர் விஜய் நாளை மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை ராசாசி அரசு மருத்துவமனையில் தொடங்கி வைக்கிறார். ரூ.717 கோடி ஒதுக்கீட்டில் ஜோய் ஆலுக்காஸ் மற்றும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனங்களுக்கு 70:30 என்ற விகிதத்தில் டெண்டர் வழங்கப்பட்டது. ஜூன் 22 முதல் பிறக்கும் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்படுவர். தொடக்க விழாவுக்குப் பின் விஜய் மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். முதல்வரான பின் முதல் மதுரை வருகை என்பதால் தவெக தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.
மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
Source: OneIndia Tamil