தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டு, தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம் உருவாக்கப்படும் என்றும், ஆண்டுதோறும் அரசு சினிமா விருதுகள் வழங்கப்படும் என்றும், வரிவிலக்கு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார். படப்பிடிப்பு அனுமதி இனி எளிதாகக் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம்: அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
Source: Kalki Online