சிங்கப்பூர் மலையாளி எழுத்தாளர் அனிதா தேவி பிள்ளையின் புதிய சிறுகதைத் தொகுப்பு ‘நாவு நினைவில் வைத்திருப்பது’ இம்மாதம் 20ஆம் தேதி தேசிய நூலக வாரியத்தில் வெளியிடப்பட்டது. இது அவரது பதினொன்றாவது நூலும் முதல் சிறுகதைத் தொகுப்பும் ஆகும். உணவை ஒரு கதாபாத்திரமாகக் கொண்டு மலையாளப் பெண்களின் அடையாளம் மற்றும் புலம்பெயர்வு அனுபவங்களை ஆராய்கிறது. வெளியீட்டு விழாவில் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், கனடா தூதர் பால் தோப்பில் கலந்துகொண்டனர்.
உணவை மையமாகக் கொண்ட அனிதா தேவி பிள்ளையின் புதிய சிறுகதைத் தொகுப்பு வெளியீடு
Source: Tamil Murasu