ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் முன்வைத்த 7 நாள் அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்தார். இதையடுத்து இரு நாடுகளுக்கு இடையிலான போர்ப்பதற்றம் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான், அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி பின்வாங்க மாட்டோம் என்றும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண முடியும் என்றும் தெஹ்ரானில் தெரிவித்தார். அமெரிக்க இடைத்தேர்தலுக்குப் பின் மோதல் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி முன்மொழிவை டிரம்ப் நிராகரிப்பு: ஈரான் அதிபர் பதிலடி
Source: Nakkheeran