ஹரியானா மாநிலம் அம்பாலாவின் துல்கோட் கிராமத்தில் கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் 15 முதல் 20 பேர் வரை சிக்கியிருக்கலாம் என அம்பாலா நகர எஸ்டிஎம் தர்ஷன் குமார் தெரிவித்தார். என்டிஆர்எஃப், எஸ்டிஆர்எஃப், தீயணைப்புப் படை உள்ளிட்ட குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. கட்டிட உரிமையாளரும் ஒப்பந்ததாரரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அம்பாலாவில் கட்டிடம் இடிந்து விழுந்து இருவர் பலி
Source: news18.com