ரூ.2,000-க்கு மேல் நடைபெறும் வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு MDR கட்டணம் விதிக்கும் முடிவுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, மத்திய அரசு, RBI, NPCI உள்ளிட்ட தரப்புகளுக்கு நோட்டீஸ் அனுப்பி நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது. அக்டோபர் 15, 2026 முதல் நடைமுறைக்கு வரும் இந்தக் கட்டணம், அரசுக்கு வருவாய் அல்ல; கட்டணம் 0.4 சதவீதம், அதிகபட்சம் ரூ.300.
UPI கட்டண விதிமுறைக்கு இடைக்காலத் தடை மறுப்பு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Source: malaimurasu.com