தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 19 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கும், ஏனைய பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.
19 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை: வானிலை மையம்
Source: News7 Tamil