தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அடுத்த இரு நாட்களுக்கும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை தொடரும். வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுவதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
Source: ABP Nadu