2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய அணி 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றது. கிரண், பூவம்மா, பிராச்சி, வித்யா ராம்ராஜ் அடங்கிய அணி, பஹ்ரைன் மற்றும் சீனாவை பின்னுக்குத் தள்ளியது. இது தடகளத்தில் இந்தியாவின் முதல் தங்கம்; வித்யா ராம்ராஜுக்கு இப்போட்டியில் மூன்றாவது பதக்கம்.
ஆசிய விளையாட்டு: மகளிர் 4x400 மீ தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்
Source: news18.com