ஆசிய விளையாட்டு: கிரேக்க ரோமன் மல்யுத்தத்தில் சுனில் குமாருக்கு வெண்கலம்

ஆசிய விளையாட்டு: கிரேக்க ரோமன் மல்யுத்தத்தில் சுனில் குமாருக்கு வெண்கலம்

நகோயாவில் நடைபெற்ற 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரேக்க ரோமன் மல்யுத்தம் 87 கிலோ பிரிவில் இந்தியாவின் சுனில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார். பிலிப்பைன்ஸின் காலம் ஜான்ஸ்டன் ராபர்ட்ஸை 9-0 என்ற கணக்கில் டெக்னிக்கல் சுபீரியாரிட்டி முறையில் வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் கிரேக்க ரோமன் பிரிவில் இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை 27 வயதான அவர் படைத்துள்ளார்.

Source: news18.com

More in Sports

Read the live feed on ZapIndies