தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா இணைந்து நடத்தும் 2027 ஒருநாள் உலகக் கோப்பையின் அதிகாரப்பூர்வ அட்டவணை அக்டோபர் 1ஆம் தேதி கேப் டவுனில் வெளியாகிறது. ஐசிசி மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா இணைந்து அறிவிக்கும் இந்நிகழ்வில் டிக்கெட் முன்பதிவு விவரங்களும் வெளியாகும். 14 அணிகள் பங்கேற்கும் இத்தொடர் 2003க்குப் பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடைபெறுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
2027 உலகக் கோப்பை அட்டவணை நாளை கேப் டவுனில் வெளியீடு
Source: Kalki Online