வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் தேர்தல் ஆணைய செயல்பாடு குறித்து ஆலோசிக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் கூடினர். கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, கூட்டணி போராடி வெல்லும் என்றும், மக்களாட்சி திரும்பும், அரசியலமைப்பு காக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். அவரது உரையை கேட்டு சோனியா காந்தி மேசையை தட்டி பாராட்டினார். கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியா கூட்டணி கூட்டத்தில் மம்தா பேச்சுக்கு சோனியா பாராட்டு
Source: news18.com