திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஜக்காம்பேட்டையில் ரூ.20 கோடியில் கட்டப்படும் உயர்மட்ட பாலத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதிக்கட்டமாக தார்சாலை அமைத்தல், சோடியம் விளக்குகள் பொருத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாத இறுதிக்குள் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்து அபாயம் நிலவிய இப்பகுதியில் பாதுகாப்பான போக்குவரத்து ஏற்படும்.
ஜக்காம்பேட்டை உயர்மட்ட பாலம் ஒரு மாதத்தில் திறப்பு
Source: ABP Nadu