நகோயாவில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் புதன்கிழமை இந்தியா ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றது. வில்வித்தையில் மகளிர், ஆடவர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளிலும், துப்பாக்கி சுடுதலில் கலப்பு அணிப் பிரிவிலும் தங்கம் கிடைத்தது. மொத்தம் 10 தங்கம், 21 வெள்ளி, 29 வெண்கலம் என 60 பதக்கங்களுடன் இந்தியா 12வது இடத்திலிருந்து 8வது இடத்துக்கு உயர்ந்தது.
ஆசிய விளையாட்டு: ஒரே நாளில் 4 தங்கம், இந்தியா 8வது இடத்துக்கு முன்னேற்றம்
Source: myKhel tamil