தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கடலோர தமிழகப் பகுதிகளில் வளிமண்டல சுழற்சியும், தென் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை காற்றழுத்த தாழ்வு பாதையும் நிலவுவதே காரணம். சென்னையில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை எச்சரிக்கை
Source: Kumudam