கிரீஸ் வடக்கில் உள்ள கொரோனியா ஏரியின் நீர்ப்பரப்பு 1984-ஆம் ஆண்டை விட சுமார் 94 சதவிகிதம் குறைந்துள்ளது. ஏதென்ஸ் தேசிய ஆய்வகத்தின் செயற்கைக்கோள் தரவுகளின்படி, நீர்ப்பரப்பு 42.8 சதுர கிலோமீட்டரிலிருந்து 2.7 சதுர கிலோமீட்டராகச் சுருங்கியுள்ளது. குறைந்த மழைப்பொழிவு, காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பம், விவசாயத்துக்கான அதிக நீர் எடுப்பு ஆகியவை காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. ஒரு காலத்தில் பறவைகளின் வாழ்விடமாக இருந்த இந்த ஏரி, இப்போது காய்ந்த மண்பரப்பாகக் காட்சியளிக்கிறது.
கிரீஸ் கொரோனியா ஏரி 94% சுருங்கியது
Source: Puthiya Thalaimurai