ஹார்முஸ் ஜலசந்தியில் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் 4 வர்த்தக கப்பல்கள் அடையாளம் தெரியாத எறிபொருட்களால் தாக்கப்பட்டதாக UKMTO தெரிவித்துள்ளது. குவைத் நிறுவனத்திற்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றில் தீப்பிடித்து கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது; ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். மூன்று கப்பல்கள் லைபீரியா கொடியுடன் சென்றதாக Reuters கூறுகிறது. ஈரான்–அமெரிக்க பதற்றம் நிலவும் நேரத்தில் இத்தாக்குதல்கள் நடந்துள்ளதால் கவலை அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் 4 வர்த்தக கப்பல்கள் தாக்குதல்
Source: Puthiya Thalaimurai