நெடுஞ்சாலையில் ஓட்டும்போது சிறிய தவறு கூட பெரிய விபத்துக்கு வழிவகுக்கும் என்பதால், இந்திய மோட்டார் வாகன ஓட்டுநர் விதிமுறைகள் 2017-ல் குறிப்பிட்டுள்ள 7 முக்கிய பாதுகாப்பு விதிகளை ஓட்டுநர்கள் பின்பற்ற வேண்டும். முன்னால் செல்லும் வாகனத்துடன் போதுமான இடைவெளி வைத்தல், சரியான முறையில் ஓவர்டேக் செய்தல், நெடுஞ்சாலையில் இணையும்போது வழிவிடுதல், மோசமான வானிலையில் வேகத்தைக் குறைத்து இடைவெளியை அதிகரித்தல், சுரங்கப்பாதைகளில் ஓவர்டேக் மற்றும் யூ-டர்ன் தவிர்த்தல் ஆகியவை அடங்கும்.
நெடுஞ்சாலை பாதுகாப்பு: மோட்டார் வாகன விதிகளின் 7 முக்கிய விதிகள்
Source: Asianet News Tamil