தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின், மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் குறித்து முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார். மக்களை சாலையில் போராட விட்டுவிட்டு பட்டு வேஷ்டி சட்டையில் முதல்வர் பந்தா செய்வதாகவும், ஜோசியர் ஆலோசனைப்படி ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உடை அணிவதாகவும் குற்றம்சாட்டினார். காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததையும் சுட்டிக்காட்டினார்.
தாராபுரத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்த முக ஸ்டாலின்
Source: OneIndia Tamil