மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2 முதல் பொதுத்துறை வங்கிகள் ஒரு மாத சிறப்பு பிரச்சாரத்தைத் தொடங்க வேண்டும் என அறிவித்துள்ளார். "இளைஞர்களுக்கான வங்கி சேவை" எனப் பெயரிடப்பட்ட இந்த இயக்கம், 16 வயதுக்கு மேற்பட்ட Gen Z இளைஞர்களையும் புதிய முதலீட்டாளர்களையும் வங்கி சேவைக்குள் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாகச் சென்று கணக்குகளைத் தொடங்குதல், யுவா கியோஸ்க் வசதிகள், 24/7 டிஜிட்டல் சேவைகள் ஆகியவை இதில் அடங்கும். இந்திய வங்கிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் 12 பொதுத்துறை வங்கிகளும் இதை செயல்படுத்தும்.
இளைஞர்களுக்கான வங்கி சேவை: அக்.2 முதல் சிறப்பு பிரச்சாரம்
Source: Kalki Online