தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) உருவாக்கத்திற்கு தனது பிள்ளைகளின் எதிர்வினையே தொடக்கப்புள்ளியாக அமைந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார். கொழும்பு பாடசாலை சிறுமிகள் மீதான பாலியல் சுரண்டல் செய்தி குறித்து பிள்ளைகள் கேள்வி எழுப்பியதை அடுத்து, சிறுவர் பாதுகாப்பில் கடும் நடவடிக்கை எடுக்க முடிவெடுத்ததாக அவர் கூறினார். 1996-இல் செயலணி அமைத்து, 1998-இல் NCPA சட்டம் நிறைவேற்றப்பட்டு, 1999-இல் அதிகாரசபை செயல்படத் தொடங்கியது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை உருவாக்கத்திற்கு என் பிள்ளைகளே காரணம்: சந்திரிகா
Source: IBC Tamil