உத்தரப் பிரதேசம் நொய்டா செக்டர் 94-ல் உள்ள சூப்பர் நோவா சொசைட்டி கட்டிடத்தின் 43வது மாடியில் இருந்து 28 வயது மென்பொருள் பொறியாளர் சம்பவ் ஜெயின் குதித்து உயிரிழந்தார். குருகிராமைச் சேர்ந்த அவர் ஹோம் ஸ்டேவில் தங்கியிருந்த நிலையில் நேற்று காலை இச்சம்பவம் நிகழ்ந்தது. பணப் பிரச்சினை, திருமண வாழ்க்கை மற்றும் மகனின் உடல்நலப் பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நொய்டாவில் 43வது மாடியில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை
Source: Maalaimalar