பிஎஸ்என்எல் தனது STV 202 மற்றும் STV 2449 முன்பணம் செலுத்தும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி இலவச காப்பீட்டு பாதுகாப்பை வழங்கத் தொடங்கியுள்ளது. ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து விபத்து உயிரிழப்புக்கு ரூ.1 லட்சமும், இணைய மோசடிக்கு ரூ.10,000 வரையும் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ரீசார்ஜ் செய்த 24 மணி நேரத்தில் காப்பீடு தானாக செயல்படும்; மோசடியை ஏழு நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
பிஎஸ்என்எல் இரண்டு திட்டங்களில் இலவச காப்பீடு அறிமுகம்
Source: Asianet News Tamil