ஜெர்மனியில் நடைபெற்ற மியூனிக் தலைவர்கள் சந்திப்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியா-ரஷ்யா உறவு 1950களில் இருந்தே முக்கியத்துவம் பெற்றது என்று தெரிவித்தார். பாதுகாப்பு மற்றும் எல்லைப் பிரச்சினைகளில் ரஷ்யாவும் அதற்கு முன்பு சோவியத் ஒன்றியமும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததை அவர் நினைவுகூர்ந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு பாதுகாப்புத் துறையைத் தாண்டி அணுசக்தி, விண்வெளி, வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி துறைகளில் விரிவடைந்துள்ளது.
ரஷ்யாவை நம்புவதற்கான காரணங்களை ஜெய்சங்கர் விளக்கினார்
Source: malaimurasu.com