தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரியும், அவரது தனிநபர் முடிவுகளை எதிர்த்தும் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்கிறது. மற்ற இரு ஆணையர்களின் ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்ட முடிவுகள், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான ஆட்சேபனைகள், படிவம் 6 மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் மனுக்களில் எழுப்பப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையம், சட்ட அமைச்சகம் உள்ளிட்டோர் எதிர்மனுதாரர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் கியானேஷ் குமாருக்கு எதிரான மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது
Source: news18.com