2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமியை மீண்டும் சேர்ப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். காயம் காரணமாக ஷமி அணியில் இருந்து விலகியுள்ள நிலையில், தேர்வுக்குழு அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்களை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்டோருடன் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார் ஆகியோர் தயாராக உள்ளதால் ஷமியின் பக்கம் தேர்வுக்குழு செல்ல வாய்ப்பில்லை என்று அவர் தெரிவித்தார்.
2027 உலகக்கோப்பையில் ஷமிக்கு இடமில்லை: தினேஷ் கார்த்திக்
Source: myKhel tamil