தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், கோவை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், கடலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் இதில் அடங்கும். பல்வேறு உயரங்களில் நிலவும் வளிமண்டல சுழற்சிகளே இதற்குக் காரணம். நாளை கோவை மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய பகுதிகளில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Source: OneIndia Tamil